கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்.. அதிரடி காட்டும் சிபிசிஐடி | Kodanad case | Thanthitv

Update: 2024-07-25 15:37 GMT

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், தீபு மற்றும் உதயகுமார் ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகினர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே இருப்பவர்களிடம், கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து சிபிசிஐடி போலீசார் சம்மன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய தீபு, ஜம்ஷீர் அலி, உதயகுமார் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதன்படி தீபு மற்றும் உதயகுமார் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகி இருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்