500 அடி பள்ளத்தில் பல்டி அடித்த கார்.. வாலிபர் நேர்ந்த விபரீதம்..! கொடைக்கானலை அலறவிட்ட சம்பவம்
பழனி-கொடைக்கானல் மலை சாலையில் 500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரத்தை சேர்ந்த ஒப்பந்தகாரர்களான செந்தில், நந்து இருவரும் கொடைக்கானல் சென்று விட்டு பழனி வழியாக தாராபுரத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். பழனி- கொடைக்கானல் சாலையில் ஏழாவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இருவரையும் தீயணைப்பு படையினர் கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். இதில் செந்தில் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.