கேரள மாநிலம் திருச்சூரில், ஓவியர் ஒருவர் பாரம்பரிய முறைப்படி வாயிற்கதவு அமைத்து அசத்தியுள்ளார். டாவின்சி சுரேஷ் எனும் ஓவியருக்கு, கடந்த 15 ஆண்டுகளாக தனது வீட்டிற்கு வித்தியாசமான வாயிற்கதவை அமைக்க வேண்டும் என கனவு இருந்துவந்துள்ளது. இந்நிலையில் தற்போது, 13 அடி அகலம், 8 அடி உயரமும் கொண்ட கதகளி நாட்டியத்தின் பாரம்பரிய வேடத்தை வைத்து வாயிற் கதவை உருவாக்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..