காலை வாரிய `Google Map..' கால்வாய்க்குள் பாய்ந்த கார்.. உள்ளே இருந்தவர்களின் நிலை? | Kerala
ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பெண் உட்பட 5 பேர் கேரளாவிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் மூணாறிலிருந்து ஆலப்புழாவிற்கு சென்று கொண்டிருந்தனர். வழி தெரியாததால் கூகுள் மேப்பை பார்த்து சென்றனர். அதிகாலை 3 மணியளவில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள குருபந்தராகடவு பாலத்திற்கு அருகில் கார் வந்த போது கூகுள் மேப் சொல்லிய வழியில் சென்ற போது அங்குள்ள கால்வாயிக்குள் கார் இறங்கியது .கார் தண்ணீர்க்குள் மூழ்கியவுடன் காரின் டிக்கியை திறந்து 5 பேரும் நீந்தி உயிர் தப்பினர். உடனடியாக அருகில் இருந்த வீட்டிற்கு சென்று விபத்து பற்றி தெரிவித்துள்ளனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் காரை மீட்டுக்கும் பணியில் ஈடுபட்டனர். கால்வாய் கார் விழுந்த இடத்திலிருந்து 150 மீட்டர் தூரத்தில் வைத்து காரை கண்டுபிடித்து கிரேன் உதவியுடன் காரை மீட்டனர்.காரில் இருந்த ஒரு சில பொருட்கள் மட்டும் காணவில்லை என தெரிவித்தனர்.