கரூரில் IT அதிகாரிகளை தாக்கிய வழக்கு - 15 பேருக்கு வரப்போகும் உத்தரவு | Karur
கரூரில் வருமான வரி சோதனையின் போது அதிகாரிகளை தாக்கிய வழக்கில், குற்றவியல் நீதிமன்றத்தில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று உத்தரவு வழங்கப்பட உள்ளது.
கரூரில் கடந்த மே 26ஆம் தேதி அசோக் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட சென்ற போது, அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இந்த வழக்கில் 19 பேர் கைது செய்யப்பட்டு, கரூர் அமர்வு நீதிமன்றம் மூலம் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து வருமான வரித்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, ஜாமின் மனுவை ரத்து செய்து, 15 பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. மேலும், குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து உத்தரவட வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தது. அதன்படி, 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பின்னர், குற்றவியல் நீதிபதி ராஜலிங்கத்திடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, இரு தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றது. இதையடுத்து, வழக்கு தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளார். அதை நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான 15 திமுகவினர் சிறை காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.