கடல் போல் மாறி சீறி வரும் காவிரி தண்ணீர் - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

Update: 2024-07-29 12:50 GMT

மேட்டூர் அணையில் இருந்து நேற்று திறந்து விடப்பட்ட 12 ஆயிரம் கன அடி தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் பகுதியை வந்தடைந்தது. கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதால், காவிரியில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் காவிரிக் கரையோர மக்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் காவிரியில் குளிக்க, துணி துவைக்க, ஆடு மாடுகளை குளிப்பாட்ட வேண்டாம் என பதாகைகள் வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்