உறவினர் வீட்டில் தங்கிய பெண்... மறுநாள் காத்திருந்த அதிர்ச்சி... அடுத்தது வெளிவந்த பகீர் `உண்மை'
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் நெல்சன். இவருடைய சகோதரி மகள் சோனியா கேரள மாநிலம் கொல்லத்தில் அமைந்துள்ள, நடுவில்கரையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மார்த்தாண்டத்தில் உள்ள உறவினர் வீட்டு, பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்த சோனியா, அன்று இரவு நெல்சன் வீட்டிலேயே தங்கிவிட்டார். மறுநாள் காலையில் கேரளா கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் வைக்கபட்டிருந்த, 5 சவரன் தங்க சங்கிலி, ஒன்றரை சவரன் தங்க வளையல் என ஆறரை சவரன் நகைகள் நெல்சன் வீட்டில் காணாமல் போயிருந்தது. சந்தேகத்தின் பேரில் சோனியாவிடம் நெல்சன் விசாரித்துள்ளார். ஆனால் சோனியா நகையை எடுக்கவில்லை மறுத்துள்ளார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், சோனியாவின் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சோனியாவின் கணவர், தன் மனைவி நகை திருடியதையும், அதன் மூலமாக இரு சக்கர வாகனம் வாங்கியதையும் போலீசில் ஒப்புக் கொண்டார். குற்றம் உறுதியான நிலையில், தற்போது சோனியா கைது செய்யப்பட்டு தக்கலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.