சாம்சங் ஊழியரின் மனைவியுடன் சாம்சங் HR பேசிய வைரல் ஆடியோ

Update: 2024-09-20 16:21 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில், 1500 பேர் நிரந்தர பணியாளர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, CITU தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் 12வது நாளாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை நடந்த 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தொழிலாளர்களுக்கு சாம்சங் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவது நிர்வாகத்திற்கு எதிரானது என்றும்,

பணிக்கு வருபவர்களை தடுத்து போராட்டத்தில் ஈடுபடுத்துவது தெரிய வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் வரும் திங்கட்கிழமை முதல் அடையாள அட்டை முடக்கப்படும் என்றும் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்