ஓய்வு பெற்ற பெண் போலீசை அடித்தே கொன்ற மதிமுக செயலாளர் - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-08-29 11:50 GMT

ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி

என்பவர் கடந்த 22ஆம் தேதி மர்மமான முறையில்

இறந்து, காஞ்சிபுரத்தில் அழுகிய நிலையில் சடலமாக

கண்டெடுக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில்

கஸ்தூரியை, காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர்

வளையாபதியும், அவரது நண்பர் பிரபு என்பவரும் சேர்ந்து

அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதைத்

தொடர்ந்து வளையாபதி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய கூட்டாளியான பிரபு உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்