பார்த்ததும் அதிர்ந்த கலெக்டர்.. ஆபிசர்களுக்கு விழுந்த குட்டு.. பரபரத்த காஞ்சிபுரம்

Update: 2024-08-30 15:07 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் புறநகர் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார். கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. அப்போது, அடையாறு ஆற்றங்கரையோரம் அதிகளவில் குப்பை கொட்டப்பட்டுள்ளதை கண்டு, அதிருப்தி அடைந்தார். மேலும், வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்காததே இந்த நிலைக்கு காரணம் என்றும் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்