"எங்க ஊர் பொண்ணு US அதிபராகணும்..." - கமலா ஹாரிஸுக்காக சிறப்பு வழிபாடு நடத்தும் திருவாரூர் மக்கள்

Update: 2024-07-25 03:07 GMT

"எங்க ஊர் பொண்ணு அமெரிக்க அதிபராகணும்..." - கமலா ஹாரிஸுக்காக சிறப்பு வழிபாடு நடத்தும் திருவாரூர் மக்கள்

அமெரிக்க அதிபர் தேர்தலில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிட இருக்கும் நிலையில், அவருடைய பூர்விக கிராமமான துளசேந்திரபுரம் கிராமத்தில் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள், வரவேற்பு பதாகை வைத்தும், கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியும் பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்