"கச்சத்தீவைத் தந்து... 6 லட்சம் ஈழ-தமிழர்களுக்கு வாழ்வளித்தவர் இந்திரா காந்தி..!" - ப.சிதம்பரம்
1974ம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தைத் பிரதமர் மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 புள்ளி 9 சதுர கி்லோ மீட்டர் பரப்பளவு கொண்ட கச்சத்தீவைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களுக்கு புது வாழ்வு தந்தவர் இந்திரா காந்தி என்றும், 2 ஆயிரம் சதுர கி்லோ மீட்டர் இந்திய பரப்பை சீனா அபகரித்துள்ளபோது, "எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை" என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியவர் மோடி என்றும் குறிப்பிட்டுள்ளார். சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது என்றும், நல்லுணர்வுடன் நடக்கும் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு என்றும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.