ஜெய்ப்பூர் டூ சென்னை.. 1.5 டன் கறி... ஆட்டு கறி இல்லையா..?அதிரவைத்த அதிகாரிகள் ரெய்டு!

Update: 2024-08-20 15:10 GMT

சென்னையில் ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட சுமார் ஒன்றரை டன் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

ஜெய்ப்பூரில் இருந்து விரைவு ரயிலில் 5 நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட இறைச்சி கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், எழும்பூர் ரயில் நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சியின் கால்நடைத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், 40 பெட்டிகளில் இறைச்சிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுமார் ஆறு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் ஒன்றரை டன் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அதன் மீது பீச்சிங் பவுடர் கொட்டி அழிப்பதற்காக குப்பை கிடங்குக்கு கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்