"நான் யாருனு தெரியுமா ?"வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா ...?..ஊழியர்களுக்கு உத்தரவு போட்ட அமைச்சர்

Update: 2023-08-22 10:41 GMT

தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடாமல் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வலியுறுத்தி உள்ளார். கோவை துடியலூர் பகுதியில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகத்தில் அமைச்சர் சி.வி. கணேசன் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள காலி டப்பாக்கள் மற்றும் முட்புதர்களை சுத்தம் செய்யுமாறு பணியாளர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், தான் யார் என பணியாளரிடம் கேட்டு, தன்னை அமைச்சர் என்றும் அறிமுகம் செய்துகொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்