"நான் கொஞ்சம் கோளாறு.." போதைய போட்டு செய்வேன்டா தகராறு - போலீசாருடன் டிஷ்யூம் டிஷ்யூம்..
சென்னையில் மதுபோதையில் தகராறு செய்த இளம்பெண் போலீசாரைத் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புத்தகரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சாலையில் விழுந்து கிடந்துள்ளார். பொதுமக்கள் அவரது ஆண் நண்பருக்குத் தகவல் தந்ததுடன், லேசான காயம் அடைந்திருந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். போதை தெளிவதற்காக காத்திருந்த போது, மருத்துவர், செவிலியர்களுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த நிலையில், அவர்களுடன் வாக்குவாதம் செய்ததுடன், பெண் காவலர் முத்துலட்சுமியை தாக்கியுள்ளார். போலீசார் அந்த இளம்பெண்ணை ரோந்து வாகனத்தில் வீட்டிற்கு அனுப்பி வைத்ததுடன், முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.