திருவாரூர் அருகே உள்ள தண்டலை வடக்கு தெருவை சேர்ந்த அஜித் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டின் முன்பு மதுமிதா என்ற பெண் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பெண் காவலராக பணிபுரியும் தன்னை அஜித் பதிவு திருமணம் செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாக மதுமிதா புகார் தெரிவித்தார். அஜித்தும் மதுமிதாவும் ஒரே பள்ளியில் படித்ததாகவும், இருவரும் மூன்று வருட காலமாக காதலித்து வந்ததாகவும் ஒரே வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி மதுமிதாவை அழைத்து சென்று அவரது உறவினர் வீட்டில் விட்டனர்.