வெளியூர் சென்ற மனைவி, பிள்ளைகள்.. சந்துக்குள் சடலமாக கிடந்த கணவன் - பின்னணி என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் செங்குந்தர் தெருவில் வசிப்பவர் சுந்தர்ராஜன். இவருக்கு நித்தியா என்ற மனைவியும் இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். மனைவியும் பிள்ளைகளும் விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில் சுந்தர்ராஜன், வீட்டின் சந்து பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டு நபர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சடத்தை மீட்ட போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சுந்தர்ராஜன் மாடியில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.