நோயாளிகள் அமரும் இடத்தில் எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போடும் ஹாஸ்பிடல் ஊழியர்

Update: 2024-09-24 10:35 GMT

நோயாளிகள் அமரும் இடத்தில் எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போடும் ஹாஸ்பிடல் ஊழியர் - தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி

திருப்பத்தூர் தலைமை அரசு மருத்தவமனையில் இரு சக்கர மின்சார வாகனத்திற்கு, மின்னேற்றம் செய்த சம்பவம் பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் தலைமை அரசு மருத்துவமனையில் பல்வேறு கட்டிடங்கள் உள்ள நிலையில், அவசர சிகிச்சை பிரிவு கட்டிட வளாகத்திற்குள் சிடி ஸ்கேன் மையம் எக்ஸ்ரே லேப் உள்ளிட்ட முக்கிய ஆய்வகங்கள் உள்ளன. இங்கு சிகிச்சை பெற தினந்தோறும், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில்,

சிடி ஸ்கேன் அலுவலர் முத்து என்பவர் தன்னுடைய இரு சக்கர மின்சார வாகனத்திற்கு, மக்கள் அமருமிடத்தில் நிறுத்தி வைத்து மின்னேற்றம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இரு சக்கர மின்சார வாகனங்கள் அவ்வப்போது வெடித்து தீப்பற்றி எரியும் நிலையில், நோயாளிகள் அமரும் இடத்தில், அலுவலர் மின்னேற்றம் செய்வது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்