மெடிக்கல் ஷாப்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை

Update: 2023-11-23 03:54 GMT

அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும் மருந்துக் கடைகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை மூலம் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, கடந்த 6 மாதங்களில், விதிமீறல்களில் ஈடுபட்ட 117 மருந்து விற்பனை நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்த 6 மருந்து நிறுவனங்களின் விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுடள்ளது. வரும் காலங்களிலும், அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்