சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மாரிசெல்வராஜ், இலக்கியத்தை தாமதமாக கற்றவன் நான் என்றும், கடந்த 6 ஆண்டுகளாக தான் என் வாசிப்பு பழக்கம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், திருநெல்வேலியில் இருந்து சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசையில் ஓடி வந்தபோது நான் மெரினா கடற்கரையில் படுத்து கிடந்தேன். எனக்கு இங்கு யாரையும் தெரியாது. அப்போது வெள்ளை நாமம் போட்ட ஒருவர் எனக்கு உதவினார். அந்த நினைவை மனதில் வைத்து, மாமன்னன் படத்தில் ஒரு கேரக்டரை வைத்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.