அரசு பஸ் கண்டக்டரை அடித்தவரை நொறுக்கி எடுத்த மக்கள்.. கன்னம் பழுக்க பழுக்க அடி

Update: 2024-10-02 03:48 GMT

மது போதையில் அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த பெருமாள் அரசு பேருந்து நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஈரோட்டில் இருந்து பவானி வழியாக சென்னம்பட்டி செல்லும் அரசு பேருந்தில் கபிலன் என்ற இளைஞர் மது போதையில் ஏறி இருக்கிறார். அப்போது ஒலகடம் நிறுத்தத்தில் இறங்கிய கபிலன் மதுபோதையில் பெருமாளைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த பொது மக்கள் கபிலனைப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாகப் பெருமாள் அளித்த புகார் அடிப்படையில் கபிலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்