ஓபிஎஸ்-உடனான சந்திப்பில் அரசியல் இல்லை என நடிகர் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்யநாராயணனா தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த சத்யநாராயணா, பின்னர், ரஜினி ரசிகரின் இல்ல திருமண விழாவிலும் கலந்துகொண்டார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்றார். ரஜினிகாந்த்துக்கு ஆளுநர் பதவி கிடைக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது ஆண்டவன் முடிவு என கூறினார்.