அரசு ஹாஸ்பிடலில் அதிகாரி திடீர் ரெய்டு - கடைசியில் விடுத்த பகிரங்க எச்சரிக்கை
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு
சென்ற அவர் அங்குள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவமனை வளாகம் தூய்மையாக இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்ட ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் சரியான நேரத்திற்கு உணவுகள் வழங்கப்படுகிறதா
என்று விசாரித்தார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பார்த்து நோயாளிகளிடம்
கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், நோயாளிகளிடம் லஞ்சம் வாஙுகினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என்றும் எச்சரித்தார்.