உயிரையே குடிக்கும் உணவு பொருட்கள் - எச்சரித்த உணவு பாதுகாப்புத்துறை - சிவகங்கையில்அதிரடி ஆய்வு
சிவகங்கையில், காந்தி வீதியில் உள்ள கடைகள், உணவகங்களில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெட்டிக்கடைகளில் காலாவதியான மற்றும் தேதி குறிப்பிடாத குளிர்பானங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்து, கீழே கொட்டி அழித்தார். மேலும் காலாவதியான குளிர்பானங்களை விற்றதாக 2 கடைகளுக்கு தலா 1000 ரூபாய் அபராதம் விதித்தார். தொடர்ந்து, அருகே இருந்த உணவகத்தில் விற்கப்பட்ட பிரியாணியில், ரசாயன வண்ணப்பொடிகள் கலக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த அவர், உணவக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்தார். காலாவதியான உணவுப் பொருட்களை உட்கொண்டால், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர்,