4 குருகுல வார்டன்களுக்கு குறுகுறுப்பு.. மாணவர்களுக்கு உச்சகட்ட செக்ஸ் டார்ச்சர்

Update: 2023-08-08 05:47 GMT

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள தனியார் குருகுல பள்ளி, கடந்த 60 ஆண்டுகாலமாக ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சேவை செய்து வருகிறது. இந்த ஆசிரமத்தில் துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சேரும் மாணவர்கள் அனைவருக்கும் உணவு, உடை மற்றும் இருப்பிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் நிலையில், இந்த குருகுல பள்ளியில் 250 மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை கருப்பையா என்பவர் நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில், குருகுல பள்ளியில் பாதுகாவலர்களாக உள்ள 4 பேர், மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனுவாக சென்ற நிலையில் விவகாரம் சூடுபிடித்தது. புகாரை பெற்ற மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட குருகுல பள்ளியில் சமூக நலத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிட்டார். அதன்படி, சமூக நலத்துறை அதிகாரிகள், போலீசாருடன் சேர்ந்து, புகாருக்கு உள்ளான குருகுல பள்ளியில் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குருகுல பள்ளியின் பாதுகாவலர்களான தனசேகர், பார்த்திபன், சிவகிரி, ஏசுராஜ் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வேறு மாணவர்கள் இதுபோன்று பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளனரா? என்பது குறித்து ஆசிரமத்தில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்