போலீஸ் உடையில் சுற்றிய `போலி' சாமியார்... சிக்கிய தம்பதி... ஸ்கெட்ச் போட்டு அரங்கேற்றிய சம்பவம்
ஈரோட்டில் வயதான தம்பதியினருக்கு மயக்க மருந்து கொடுத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டை சேர்ந்த சண்முகம் என்ற முதியவர்
தனது மனைவி செல்வியுடன் தனியாக வசித்து வருகிறார். இருவரும் கைகால் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் பரிகாரம்
செய்தால் சரியாகி விடும் என தெரிந்த
பெண் ஒருவர் கூறியுள்ளார். இதை நம்பி வயதான தம்பதியர் கருங்கல்பாளையம்
பகுதியை சேர்ந்த பெருமாள் என்ற
போலி சாமியாரை வீட்டிற்கு வரவழைத்து
பூஜை செய்துள்ளனர். அப்போது சாமியார் மயக்க மருந்து கலந்து கொடுத்த பாலை குடித்த வயதான தம்பதியர் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களிடமிருந்து
9 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம்
ரூபாயை திருடி கொண்டு போலி சாமியார்
தலைமறைவான நிலையில் காவல்
நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் போலீஸ் உடையில் சுற்றி
திரிந்த போலி சாமியார் பெருமாளை காவல்துறையினர் கைது செய்தனர். வயதான தம்பதியரிடம் திருடி சென்ற நகை மற்றும் பணத்தையும் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.