மாணவர்களை குறிவைத்து பகீர் மோசடி... கல்லூரிகளே நேரடியாக இறங்கிய அதிர்ச்சி - திடுக் பின்னணி

Update: 2024-07-06 15:47 GMT

12ம் வகுப்பில் அதிக கட் ஆஃப் பெறும் மாணவர்களை குறி வைத்து தேர்ச்சி விழுக்காடுகளில் குறைவாக உள்ள தனியார் கல்லூரிகளில் சேர்த்துள்ளது அம்பலாம்கியுள்ளது. இதன் பின்னணியை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பில்...


ஒரு காலத்தில் பொறியியல் படிப்புகளுக்கு இருந்த மவுசு காரணமாக காணும் இடமெல்லாம் பொறியியல் கல்லூரிகளும் முளைத்தன...

12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கையோடு பலரும் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்காக கூட்டம் கூட்டமாக அலைமோதிய காலமும் உண்டு...

இந்நிலையில் தான், அதிக கட் ஆஃப் பெற்ற அப்பாவி மாணவர்களை குறி வைத்து தனியார் கல்லூரிகள் ஈடுபட்ட மோசடி சம்பவம் அம்பலமாகியுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு முன்னதாக 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மொபைல் எண்களை பெறக்கூடிய தனியார் கல்லூரிகள், அந்த மாணவர்களை குறி வைத்து மிகப்பெரும் மோசடிகளை அரங்கேற்றுகின்றன.

தங்கள் கல்லூரிகளுக்கு முழுக்க முழுக்க கட்டணமே செலுத்த வேண்டாம், முழுமையாக கல்வி உதவி தொகை வழங்குகிறோம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை கூறி மாணவர்களை குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வைத்து, முதலில் சான்றிதழ்களை பெற்று விடுகின்றனர்.

அதன் பிறகு அவர்களை கல்லூரிகளில் சேர்க்க வைத்து, அந்த மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை கல்லூரி நிர்வாகங்கள் பெற்று விடுகின்றன. இது தொடர்கதையாகி வருகிறது.

199, 190 என கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர், வெறும் 4 சதவீதம் விழுக்காடு தேர்ச்சிகளை தரக்கூடிய தனியார் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்..

இது அந்த மாணவர்களின் எதிர்காலத்தையே வீணடிப்பதற்கு சமம் என புலம்புகின்றனர் கல்வியாளர்கள்...

Tags:    

மேலும் செய்திகள்