இட ஒதுக்கீடு என்ன ஆகும்..?' - "அந்த ஒரு MP உள்ளவரை.." அமித்ஷா அதிரடி | Amit Shah

Update: 2024-05-17 11:13 GMT

ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தலில் சராசரியாக 40 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் 370 சட்ட பிரிவு நீக்கப்பட்டதற்கு இதை விட பெரிய வெற்றி தேவை இல்லை எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வாரிசு அரசியலை அடிப்படையாகக் கொண்டவை என குற்றம் சாட்டினார்...

பாஜக ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவில் ஒரு எம்பி இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் தொட முடியாது என்று சூளுரைத்தார்... நாட்டில் பட்டியல், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை யாராலும் தொட முடியாது என்பதை தாங்கள் தெளிவுபடுத்தி இருப்பதாகவும், பிரதமர் மோடியை விட இந்த இட ஒதுக்கீட்டிற்கான ஆதரவாளர் வேறு யாருமில்லை எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்