மீண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரானார் கண்ணப்பன் - அரசாணை வெளியீடு

Update: 2024-06-30 05:35 GMT

மீண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரானார் கண்ணப்பன் - அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்தத் துறையின் புதிய இயக்குனராக மீண்டும் கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில், தொடக்கக் கல்வித் துறை இயக்குனராக பணியாற்றி வந்த கண்ணப்பன், பள்ளிக்கல்வி இயக்குனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். தேர்வுத்துறை இயக்குனராக பணியாற்றி வரும் சேதுராம வர்மா, தொடக்கக் கல்வி இயக்குனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா தேர்வுத்துறை இயக்குனராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்