இந்த பக்கம் போக வேண்டாம்..துண்டிக்கப்பட்ட போக்குவரத்து..பொதுமக்கள் வைத்த கோரிக்கை | Chennai Rain

Update: 2023-12-06 15:29 GMT

தையூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் அதிகரித்தது. இதனால் ஓஎம்ஆர் சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்தது. காலவாக்கம், தனியார் கல்லூரி அருகிலும், செங்கன்மால் அடுக்குமாடி குடியிருப்பு அருகிலும் மழை நீர் சூழ்ந்தது. இதனால் திருப்போரூரிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் ஓஎம்ஆர் சாலையில் 3வது நாளாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மழை நீரை அகற்ற தோண்டப்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.. ஆபத்தான முறையில் பைக்குகளுடன் பள்ளத்தில் இறங்கி ஏறி பணிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.. உடனடியாக பள்ளத்தை சீரமைத்து போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்..

Tags:    

மேலும் செய்திகள்