கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற இடத்தில் பறிபோன கணவன் உயிர்?

Update: 2024-08-26 12:32 GMT

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, மர்மமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்த இளைஞரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைரோடு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். 24 வயது இளைஞரான இவர், பாஸ்புட் கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே, கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் அருண்குமாருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இந்நிலையில், கொடைரோட்டில் இருந்து அம்மையநாயக்கனூர் செல்லும் சாலையில், ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் அருண்குமார் உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்ப்பிணியான தன் மனைவியை பார்க்க மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, இளைஞர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்