சாலை மறியலில் ஈடுபட்ட இலங்கை அகதிகள் - உடனே பறந்து வந்த வட்டாட்சியர்

Update: 2024-10-14 02:54 GMT
  • பாலக்கோடு அருகே புதியதாக திறக்கப்பட்ட இலங்கை அகதிகள் முகாமிற்கு சுடுகாடு அமைத்து தரகோரி 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் சாமன்கொட்டாய் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட இலங்கை அகதிகள் முகாம் அருகே மயானம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. முகாமில் வசித்து வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், உடலை அடக்கம் செய்ய இடமில்லாமல் தவித்த இயங்கை அகதிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்