கோவில் யானை உயிரிழப்பு-பாகன் கைது-பெரும் பரபரப்பு

Update: 2024-10-04 14:38 GMT
  • கோவில் யானை உயிரிழந்த சம்பவத்தில் 23 ஆண்டுகளாக யானை பாகனாக இருந்தவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கடந்த 11ம் தேதி குன்றக்குடி சண்முகநாதனர் கோயிலில் இருந்த 54 வயது சுப்புலட்சுமி என்ற யானை தீக்காயம் அடைந்து 30 மணி நேர தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
  • இது தொடர்பாக யானை பாகன் கார்த்தியை சிவகங்கை மாவட்ட வனத்துறையினர் கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்துள்ளனர். மின் கசிவால் யானைக்குத் தீக்காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
  • யானை பாகன் எப்போதும் யானையுடன் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும்,
  • அவர் உடன் இருந்திருந்தால் இந்த தீ விபத்தை தடுத்து இருக்க முடியும் என்பதன் அடிப்படையில் பாகன் கார்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். பாகன் கார்த்தி, யானை சுப்புலட்சுமியை கடந்த 23 ஆண்டுகளாக பராமரித்து வருவதாகவும் அதற்கு முன்பு இவருடைய மாமா இதனை பராமரித்ததாகவும் சொல்லப்படுகின்றது. கார்த்தி இதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தியே யானையை பராமரித்ததாக கூறப்படுகிறது. வனத்துறையினர் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் யானை பாகனை கைது செய்துள்ளதாகவும், தமிழக அரசு மேல்மட்ட விசாரணை குழு ஒன்றை அமைத்து உண்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்