குளத்தில் சடலமாக கிடந்த நபர்...உறவினர்களே செய்த கொலை - வெளியான திடுக்கிடும் உண்மைகள்
தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ள நிலையில், அருகேயுள்ள இரட்டை குளத்தில் கடந்த 23 ஆம் தேதி வெள்ளத்துரை சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த வெள்ளத்துரையின் மகள்கள், சொத்துக்களை அபகரிப்பதற்காக உறவினர்களே தந்தையே கொலை செய்திருக்கலாம் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.