"அதுலாம் மே மாசமே முடிஞ்சு போச்சு" - நேரில் ஆஜரான CV சண்முகத்துக்கு நீதிபதி தந்த அதிர்ச்சி

Update: 2024-07-24 07:47 GMT

அதுலாம் மே மாசமே முடிஞ்சு போச்சு" - நேரில் ஆஜரான CV சண்முகத்துக்கு நீதிபதி தந்த அதிர்ச்சி

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மீது தொடரப்பட்ட 3 அவதூறு வழக்குகளும் விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.வி.சண்முகம் நேரில் ஆஜரானார், அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் 3 அவதூறு வழக்குகளையும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினர். அந்த தடை உத்தரவு மே மாதத்துடன் முடிவடைந்து விட்டதாக நீதிபதி ராதிகா கூறினார். இதையடுத்து மீண்டும் தடை உத்தரவை நீட்டித்து பெற கால அவகாசம் கேட்டு வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். அதற்கு தடை உத்தரவு நீட்டிக்கப்படும்பட்சத்தில்இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்