திடீரென கேட்ட அலறல் சத்தம்.. ஓடிவந்த மனைவி..! ரத்தத்தில் மிதந்த கணவன்.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-09-04 11:44 GMT

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சிறுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். 65 வயது முதியவரான இவர், சம்பவத்தன்று இரவு வீட்டின் முன் கட்டிலில் உறங்கி கொண்டிருந்துள்ளார். முதியவரின் மனைவி வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்த நிலையில், திடீரென அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவர், மர்மநபர்களால் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு, கணவன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் மூலம் கணவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்