கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீட்டு மனை பட்டா கேட்டும், கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தினை நகர்ப்புறங்களில் விரிவுபடுத்திட கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வெளியே வந்த வட்டாட்சியர் தனபதி, பெண்களிடத்தில் கட்டுக்கட்டாக மனுக்களை பெற்றுக் கொண்டார்.