சென்னை நோக்கி வந்த அரசு பஸ்...திடீரென நடந்த அதிர்ச்சி... பீதியில் பயணிகள்.. ஸ்தம்பித்த போக்குவரத்து

Update: 2024-11-04 02:38 GMT

சென்னை நோக்கி வந்த அரசு பஸ்...திடீரென நடந்த அதிர்ச்சி... பீதியில் பயணிகள்.. ஸ்தம்பித்த போக்குவரத்து

கடலூர் மாவட்டம் வேப்பூரில் அமைந்துள்ள, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால கட்டுமான பணி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து குறுகலான சர்வீஸ் சாலையின் நடுவில் நின்றது. இதன் காரணமாக, பின்னால் வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின், லாரியில் இருந்து ஸ்டெப்பினியை வாங்கி, பேருந்தின் வெடித்த டயர் மாற்றப்பட்டது. அரசு பேருந்து அங்கிருந்து கிளம்பியதும், போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்