பிஞ்சு குழந்தைகளை பாதித்த `கவாசாகி’ நோய்

Update: 2024-05-11 15:56 GMT

கவாசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உரிய சிகிச்சை மூலம் காப்பாற்றியுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் 3 மாத குழந்தை மற்றும் 10 மாத குழந்தை தொடர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்ட நிலையில், அவர்களுக்கு கவாசாகி என்ற அரியவகை நோய் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு காய்ச்சல், கை கால் வீக்கம், தோல் உரிவது, நெரி கட்டுவது போன்ற அறிகுறிகள் தென்படும். பின்னர் இதயத்தையும், ரத்த நாளங்களையும் பாதிக்க கூடிய அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த குழந்தைகளுக்கு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான இம்யுனோ குளோபுலின் என்ற நோய் எதிர்ப்பு சக்தி மருந்து செலுத்தப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். தீவிர சிகிச்சையின் விளைவாக, நோயில் இருந்து மீண்ட குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்பிய நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் கவாசாகி நோயால் பாதிக்கப்பட்ட 8 குழந்தைகளை காப்பாற்றியுள்ளதாக கோவை அரசு மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்