களைகட்டிய சித்திரை தேரோட்டம் - தேரை இழுத்து சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். தேரின் முன்பாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தி சென்றும் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.