"கூட்டுறவு கடன்கள் குறித்து முதல்வர் உரிய முடிவு எடுப்பார்" - அமைச்சர் பெரிய கருப்பன் தகவல்

Update: 2023-12-30 03:02 GMT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டுறவு கடன்கள் குறித்து, தமிழக முதல்வர் உரிய முடிவு எடுப்பார் என்று, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார். பயிர் கடன்கள் குறித்தும் உரிய முடிவினை முதல்வர் அறிவிப்பார் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்