22 வயதில் உயிர் பறித்த கைராசி.. நொடியில் சுருண்ட வாயில்லா பூச்சி.. முத்தம் தந்து கொஞ்சி கதறிய தாய்

Update: 2024-10-24 04:58 GMT

22 வயதில் உயிர் பறித்த கைராசி.. நொடியில் சுருண்ட வாயில்லா பூச்சி.. முத்தம் தந்து கொஞ்சி கதறிய தாய்

சிதம்பரத்தில் போலி மருத்துவர் ஊசி போட்டதால், மயங்கி விழுந்த 22 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

சிதம்பரம் அருகே மேலதிருக்கழிப்பாலை கிராமத்தை சேர்ந்தவர் கவிமணி. 22 வயதான இவர், சற்று வாய் பேச முடியாத நிலையில் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக சளி, காய்ச்சல் இருந்ததால், மந்தகரை பொன்னம்பலம் நகரில் உள்ள பாலு மருந்தகத்திற்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு இருந்த மருந்தகத்தின் உரிமையாளர் மகன் சரவணன் என்ற தளபதிராஜா, கவிமணிக்கு ஊசி போட்டு மருந்துகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் கவிமணி மயக்கம் அடைந்ததாகவும், அதை பொருட்படுத்தாமல் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் சரியாகிவிடும் என்று தளபதிராஜா கூறியதாகவும் தெரிகிறது. அதன்பின்னர், மயக்க நிலையிலேயே வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, வீட்டு வாசலில் சுயநினைவின்றி கவிமணி விழுந்துள்ளார்.

உடனே, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், கவிமணியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதையடுத்து, கவிமணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், போலி மருத்துவர் தளபதி ராஜாவை காவல்நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்