சென்னையில் ஆபிஸுக்குள் புகுந்து தாசில்தாரை தாக்கிய விசிக புள்ளி.. பரவும் வீடியோ
சென்னை அயனாவரத்தில், தாசில்தாரை தாக்கியதாக விசிக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். சத்தியமூர்த்தி காலனியை சேர்ந்த சந்தானலட்சுமி என்பவருக்கு சொந்தமான நிலத்தை எதிர் தரப்பினருக்கு சாதகமாக அளவீடு செய்ததாக கூறி, கடந்த 20-ம் தேதி தாசில்தார் அலுவலகத்திற்குள் புகுந்து விசிக நிர்வாகி அசோக் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்ட தாசில்தாரை தாக்கியதாக கூறப்படும் நிலையில், புகாரின் பேரில் விசிக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இதனிடையே, தாசில்தார் மீது விசிக நிர்வாகி அளித்த புகாரின் மீது வழக்கு பதியவில்லை என கூறி, விசிகவினர் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.