இந்த மழை எங்கிருந்து வந்துச்சு? இது டிசம்பரா? ஜூலையா? - 1 மணி நேரம் பதறிப்போன சென்னை

Update: 2024-07-04 03:27 GMT

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பெய்த காற்றுடன் கூடிய கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம், போரூர், ராமாபுரம், வளசரவாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம், செங்குன்றம், புழல், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பொன்னேரி தேரடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கி நின்ற மழைநீரில் சிக்கி சில வாகனங்கள் பழுதடைந்தன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான தூசி, மாமண்டூர், வெண்பாக்கம், மாங்கால் கூட்டு சாலை, அனக்காவூர், வளர்புரம், வடதண்டலம், செங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. தாழ்வான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல, நீலகிரி மாவட்டம் கூடலூர் மட்டும் அதை சுற்றியுள்ள பந்தலூர், தேவாலா, நடுவட்டம், சேரம்பாடி, தேவர் சோலை, முதுமலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

தொடர்ச்சியாக பரவலாக மழை பெய்து வரும் சூழலில், சில பகுதிகளில் கடுங்குளிர் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்