டாக்டர் கனவை சுமந்த மாணவன்...சிறு தவறால் நொடியில் நின்ற மூச்சு - சென்னையில் பெரும் சோகம்

Update: 2024-01-14 16:02 GMT

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், தியாகராய நகரில் உள்ள நீட் தேர்வு மையத்தில் படித்து வந்துள்ளார். தியாகராய நகருக்கு மின்சார ரயில் மூலம் செல்ல, திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே ஆதர்ஷ் வந்தபோது, குறுக்கே சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனை கடப்பதற்காக, அந்த ரயில் மீது ஏறும்போது, உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில், ஆதர்ஷ் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: