சரிந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்.. சென்னை மாநகராட்சி எடுக்கப்போகும் ஆக்‌ஷன்

Update: 2024-05-28 14:08 GMT

சென்னையில் கட்டுமான பணிகளுக்கு சுத்தீகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து வரும் நிலையில், கட்டுமானப் பணிகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்த தடை விதிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதற்கு பதிலாக தொழிற்சாலைகளுக்கு சென்னை மெட்ரோ வாட்டர் வழங்கும் சுத்தீகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொடுங்கையூர் மற்றும் கோயம்பேட்டில் உள்ள கழிவு நீர் சுத்தீகரிப்பு நிலையங்களில் தினமும் 9 கோடி லிட்டர் கழிவு நீர் சுத்தீகரிக்கப்படுகிறது. இதில் 5.5 கோடி லிட்டர் அளவிலான சுத்தீகரிக்கப்பட்ட நீர், மணலி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆயிரம் லிட்டர் நீர், 80 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. ஒரு சதுர அடி கட்டிடம் கட்ட நூறு லிட்டர் நீர் தேவைப்படும் நிலையில், உபரியாக உள்ள சுத்தீகரிக்கப்பட்ட கழிவு நீரை, கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்