சென்னை அருகே வீட்டுக்குள் இருந்த செய்வினை? எடுக்க வந்த மந்திரவாதிகள்.. கடைசியில் நேர்ந்த விபரீதம்

Update: 2024-09-12 13:29 GMT

பில்லி சூனியம் எடுப்பதாக் கூறி வயதான தம்பதியை மிரட்டியதில், கணவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய வெண்மணி கிராமத்தைச் சேர்ந்த வயதான தம்பதி வரதராஜ்-ரூபாவதி. வரதராஜனுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது, மேலும் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் பில்லி சூனியம் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்கலாம் என்று வந்த விளம்பத்திரத்தில் உள்ள எண்களைத் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இதனைத் தொடர்ந்து தம்பதிகளின் வீட்டிற்கு வந்த இருவர் வீட்டில் பள்ளம் தோண்டி பாம்புகள் புதைத்து வைக்கப்பட்டு செய்வினை செய்யப்பட்டு இருப்பதாகக் கூறி உள்ளனர். அவற்றை எடுக்க 15 ஆயிரம் ரூபாய் வாங்கிய இருவர் மேலும் பணம் கேட்டதால் தம்பதிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் அந்த இருவரும் மிரட்டியதில் பயந்து போன வரதராஜ், மனநலம் பாதிக்கப்பட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து சென்னையில் உள்ள தனது மகள் கவிதா வீட்டிற்கு வந்த தம்பதிகள் இருவரும் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து கவிதா அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்