சென்னை, மைலாப்பூரில் சாலையோரம் பானிபூரி கடை நடத்தி வந்த வடமாநில இளைஞர் மர்மநபர்களால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாப்பூர் முத்துகிருஷ்ணன் தெருவில் பானிபூரி விற்று வந்த உத்தரபிரதேச இளைஞரை, அவ்வழியே சென்ற நால்வர் வீண் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், அடையாளம் தெரியாத நால்வர் மீது வழக்குபதிவு செய்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவிகள் மூலம் நால்வரையும் தேடி வருகின்றனர்.