சென்னையில் கண்டெய்னர் லாரியை திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது, மூட்டை, மூட்டையாக லாரிக்குள் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 10 டன் குட்காவை பறிமுதல் செய்த போலீசார், லாரி ஓட்டுநர் விக்னேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.