சென்னை பிரபல மருத்துவமனையில் "7 நாளைக்கு ரூ. 10 லட்சம் செலவு" உயிரோடு உள்ளே போய் பிணமான மகன்

Update: 2024-05-28 09:04 GMT

சென்னை பிரபல மருத்துவமனையில்

"7 நாளைக்கு ரூ. 10 லட்சம் செலவு"

உயிரோடு உள்ளே போய் பிணமான மகன்

"பாடி வேணுமா? இன்னும் 2 லட்சம் கொடுங்க"

ஹாஸ்பிடல்ல கடைசியா கேட்ட ஒண்ணு

சென்னை நேஷனல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் திடீரென உயிரிழந்த நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை அடுத்துள்ள பொன்னேரி பகுதியை சேர்ந்த 29 வயதான பாஸ்கர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார்.

இதில் மூவரும் படுகாயமடைந்த நிலையில், வாகனத்தை ஓட்டி வந்த பாஸ்கருக்கு நெற்றி, மூக்கு, கை ஆகிய பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

முதற்கட்ட சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவரது கையை அகற்ற வேண்டும் என கூறியதாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் அரசு மருத்துவமனை மீது நம்பிக்கையின்றி, பாரிமுனை பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையான சென்னை நேஷனல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு, பாஸ்கர் குடும்பத்திற்கு நம்பிக்கை தரும் வகையில், அனைத்து பிரச்சனையும் சரி செய்து விடலாம் எனக் கூறியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்